Saturday, October 15, 2022

Love her…

Love her... When she sips on your coffee.
She only wants to make sure it tastes just right for YOU!

Love her... When she is jealous.
Out of all the men she can have, she chose YOU!

Love her... When she has annoying little habits that drive you nuts.
YOU have them too!

Love her... When her cooking is bad.
She tries for YOU!

Love her... When she makes you watch corny love dramas while the sport is on.
She wants to share these moments with YOU!

Love her... When she spends hours to get ready.
She only wants to look her best for YOU!

Love her... When often her eyes water suddenly.
She actually had a thought of losing YOU!

Take time to make her feel special.
Dedicated to all the wonderful girls U know..

Friday, October 14, 2022

Guess who?

Guess who?

A young couple got married and went away on their honeymoon.

After 2 weeks they came back and finally put away all of the presents they received from friends and family.

Since this was a new home, the process took some time.

The silver went into the closet, items were put on the walls for display and some of the more intimate apparel was put in the bedroom drawers.

A week later, they received in the mail two tickets for a popular show where tickets were impossible to get.

They were very excited and warmed by the gesture of the person who sent this. Inside the envelope, however, was only a small piece of paper with a single line: "Guess who sent them."

The pair had much fun trying to identify the donor, but failed in the effort.

They went to the theatre, and had a wonderful time.

On their return home late at night, still trying to guess the identity of the unknown host, they found the house stripped of every article of value.

And on the bare table in the dining-room was a piece of paper on which was written in the same hand as the enclosure with the tickets: "Now you know!"

Thursday, October 13, 2022

கெட்ட வார்த்தகளா?* *கேட்ட வார்த்தைகளா?

*கெட்ட வார்த்தகளா?*
*கேட்ட வார்த்தைகளா?*
😜😜😜பையன் அப்பாவிடம் சொன்னான் '😜😜 அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '
😨' எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?"😳
🤣"கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு சொன்னேன் ..
சரி அப்புறம்...
7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..
🤦‍♀அதே எழவு தானே🤦‍♀. வரும்... சரி நீ என்ன சொன்ன..
அதே 🤦‍♀எழவு தானே🤦‍♀ வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "
" சரி ,சரி நாளைக்கு வரேன் "
😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்😜
"🤣 அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"🤣
"😨 இல்லடா நாளைக்கு வரேன்😳 "
😜" சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு "😜
"😳 எதுக்குடா ?😨
😜" drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்..ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..
அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்🤦‍♀ லூசா அவன்.. சரி நீ என்ன பண்ணுன..
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்🤦‍♀ லூசு-ன்னு சொன்னேன்..🤦‍♀
உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..
" சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "
😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்
" இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா "😜
😨" இல்லடா நாளைக்கு வரேன் "😳
"😜 நீ போக வேணாம் பா "😜
😳" ஏண்டா?"😨
" 😜என்னை ஸ்கூலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க "😜
"😳 என்னாச்சுடா?"😨
"😜 ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் ..😜
😜அங்க கணக்கு டீச்சர் ,பி.டி. டீச்சர் சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க "😜
"😳 சயின்ஸ் டீச்சரா ..!! 🤦‍♀அந்த நாய் ஏன்டா 🤦‍♀அங்க இருந்தான் ?"
" 😜அதே தான் பா நானும் கேட்டேன் .
டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க "😜
😂😂😂நீதி: குழந்தைகள் *கெட்ட* வார்தைகள் பேசுவதில்லை
*கேட்ட* வார்தைகளையே பேசுகிறார்கள்..😂😂😂

Wednesday, October 12, 2022

WHY A STUDENT FAILS ?

WHY A STUDENT FAILS ?

It's not the fault of the student if he fails, because the year has ONLY 365' days.

Typical academic year for a student.

1. Sundays-52,Sundays in a year, you know Sundays are for rest.
Days left 313.

2. Summer holidays-50 where weather is very hot and difficult to study.
Days left 263.

3. 8 hours daily sleep-means 130 days.
Days left 141.

4. 1 hour for daily playing-(good for health) means 15 days.
Days left 126.

5. 2 hours daily for food & other delicacies(chew properly & eat)-means 30days.
Days left 96.

6. 1 hour for talking (man is a social animal)-means 15 days !
Days left 81.

7. Exam days per year atleast 35 days.
Days left 46.

8. Quarterly, Half yearly and festival (holidays)-40 days.
Balance 6 days.

9. For sickness atleast 3 days.
Remaining days 3.

10. Movies and functions atleast 2 days.
1 day left.

11. That 1 day is your birthday. "How can you study at that day?"
Balance days 0

"How can a student PASS???

தெளிவு எப்போது வரும்?

தெளிவு எப்போது வரும்?

"பக்குவம்" என்னும் தலைப்பில் கவியரசர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதியது!!!

🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது' என்று வாதாடும்.

🌼எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்' நிலை.

🌼ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!'

🌼இதுதான் அந்தப் பழமொழி.

🌼பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு', `இது பித்தம்', என்கிற
புத்தி வருகிறது.

🌼`டென்ஷன்' என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼`முறுக்கான நிலை' என்று அதைக் கூறலாம்.

🌼அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்' என்கிற `திமிர்' வருகிறது.

🌼அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்', `இப்படித்தான் செய்யலாம்' என்ற புத்தி வருகிறது.

🌼இனி விஷயத்திற்கு வருகிறேன்

🌼`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்' என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை
உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼ஆரம்பத்தில் `இதுதான் சரி' என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு' என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே
எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே
வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த
நிலையை எய்தியவர்கள்.

🌼மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ
நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்' என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும்
கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼`மனப்பக்குவம்' என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼அந்த நிலையில் எதையுமே `இல்லை' என்று மறுக்கின்ற
எண்ணம் வராது.

🌼`இருக்கக்கூடும்' என்றே சொல்லத் தோன்றும்.

வந்து விட்டது.

🌼காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி' என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன்.

🌼என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்'.

படித்ததில் கவர்ந்தது. பதிவிட்டுள்ளேன்
பா பாலா 🙏🏻👍
   #✍️கண்ணதாசனின் வரிகள்📝 #✍எனக்கு பிடித்த எழுத்தாளர் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💑பாரதி கண்ணம்மா #👨‍👨‍👧‍👦பாண்டியன் ஸ்டோர்ஸ்

*பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..*

  *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..*

  *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..*

  *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*

  *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..*

  நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர்.

  *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..*

  35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. 

*நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..*

 அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்..

   *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான்  ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர்.

       *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. 

  *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..*

     *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..*

  *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..*

   *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..*

   முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில்  மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின.  பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின..

   இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்..  *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..*

  *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..*

  *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..*

  *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..*

  *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..*

  *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..*

    *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..*

  *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..*

அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது.

மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..?

*_ *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட் என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர்._*

 *35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான்.* 

*_பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை._*

 *மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி.* 

*_சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று._*

 *அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, ​​மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.*

*_நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான்_*

*இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனாவில் பாதிக்கப் பட்டு  இறந்து போனார்..*

*என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..*

*எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..*

 *_அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான்._* 

*_இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்.._*

*என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும்.* 

*_முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி 35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும் என்று கூறினார்.  அனைவரும் ஆச்சரியப்பட்டனர்._*

*உறவுகளை சந்தித்துக்கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..*

*உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..*

*படித்தவுடன் என்னையறியாமல் என் கண்ணின் ஓரம் நீர்......*_

👌👏👍🤝🥰🙏💐👆👆👆