Tuesday, July 14, 2020

சித்தர்களின் குரல்

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே உண்டு என புலிப்பாணி சித்தர் தனது வானவியல் சாஸ்திரம் நூலில் கூறுகிறார். அதில் சில ரகசியங்களை மட்டும் இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்....

🗝️ *_குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது._*

🗝️ *_பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது._*

🗝️ *_புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது._*

🗝️ *_பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது._*

🗝️ *_முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்._*

🗝️ *_பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்._*

🗝️ *_பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்._*

🗝️ *_அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்._*

🗝️ *_மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்._*

🗝️ *_அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்._*

🗝️ *_நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்._*

          - சித்தர்களின் குரல்

1 comment:

  1. இந்த சிறந்த உத்வேகம் தமிழ் ஒலிப்பு விளக்கப்படத்தை உருவாக்க எங்களுக்கு வழி வகுத்தது. தமிழ் (ஆங்கிலத்தில் கிடை து) போன்ற குறிப்பிட்ட மொழியில் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கும். அண்ணாக்கு ஒலிப்புகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தமிழ் ஒலிப்பு இல்லத்தை உருவாக்க முயற்சிக்கிறோம். உயிரெழுத்து வரைபடம் அல்லது உயிரெழுத்து விளக்கப்படம் என்பது உயிரெழுத்துக்களின் திட்ட அமைப்பாகும். விவாதிக்கப்படும் குறிப்பிட்ட மொழியைப் பொறுத்து, அது ஒரு முக்கோணம் அல்லது நாற்கர வடிவத்தை எடுக்கலாம். அண்ணாக்கு ஒலிப்பு, அண்ணாக்கு தொடர்புடையது, அண்ணாக்கு அதிர்வுடன் வெளிப்படுத்தப்படுகிறது, அல்லது நாக்கின் பின்புறம் அண்ணாக்கு அருகில் அல்லது தொடர்பு கொண்டது, இருப்பினும், இவை அனைத்தும் இன்று ஒரு அண்ணாக்கு அதிர்வு (uvular trill ) ஒலிப்பாக இருக்கும்.

    FIG.14.AMMA (அம்மா), உதடு மட்டத்தில் வார்த்தை உருவாக்கம், THA (த), உதடு (லேபியோ -லத்தீன் மொழியில் labium என்றால் உதடு என்று பொருள்) பல் மட்டத்தில், MEE
    (மீ ) வார்த்தை காற்று வாய்வழி குழியில் எதிரொலிக்கிறது (word air resonate at oral cavity,) ZHL(ழி) வார்த்தை வாய்வழி குழிக்கு பின்னால் எதிரொலிக்கிறது (word resonate posteriorly at oral cavity) , AAA (ஆ) வார்த்தை உள்நாக்கு முனை பின்புற தொண்டைச் சுவரைத் தொடுகிறது.(uvula tip touches the posterior pharyngeal wall) - யோக தாண்டம் போன்ற தோற்றம் (The look similar in yoga thandam).

    ReplyDelete