Saturday, September 5, 2020

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020 - 2022

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சியாகும் இவர்கள் 1.9.2020 முதல் 21.3.2022 வரை அந்தந்த ராசிகளில் அமர்ந்து 12 ராசிகாரர்களுக்கும் பலாபலன்களை வழங்குவார்கள்.

மேஷம்

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு   3 ம் இடத்தில் இருந்து காரியங்களில் வெற்றியும் , மன தைரியத்தையும் அளித்து வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு 2 ம் வீட்டில் அமரபோகிறார்.  பேச்சில் சற்று நிதானம் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும் ஆகவே சேமிப்பை அதிகபடுத்தவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குலையும் எனவே விட்டுக்கொடுத்து போவது நல்லது. எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பெண்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இருந்து பண விரையம், வீண் செலவுகளை கொடுத்து வந்த கேது  இப்போது 8 ஆம் வீட்டில் நுழைவதால்  சற்று பொறுமையை கடைபிடிக்கவும். தெய்வீக சிந்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் இருந்து வந்த மந்த போக்கு விலகி புது புது உத்திகளை கையாண்டு பெரும் லாபத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் லாபம் அதிகரிக்கும். உடன் பணியாற்றுபவர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி நட்பு பாராட்ட படுவீர்கள். சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டாகும். 

ரிஷபம்

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள்  ராசிக்கு 2 ம் வீட்டில் அமர்ந்து வளர்ச்சிக்கு தடையாகவும் மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகு இனி உங்கள் ஜென்ம ராசியில் வந்து அமர்வதால் இது நாள் வரை ராகுவாலும் , அஷ்டமத்து சனியாலும் அனுபவித்து வந்த கஷ்டங்கள் விலகி இனிதான நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். முதல் இரண்டு மாதங்கள் மந்தமான நிலை உருவாகும் பிறகு 9 ல் வரப்போகும் குரு பகவான் உங்கள் ராசியையும் , ராசியில் நிற்கும் ராகு பகவானையும் தன் சுப பார்வையில் பார்க்கபோவதால் இனி எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிட்டும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். 

கேது பலன்கள்: இது நாள் வரை  ராசிக்கு 8 ல் இருந்து  பல விதமான பிரச்சனைகளை கொடுத்து வந்த கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 7 ம் வீட்டில்  அமரப்போகிறார் .  வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும் இதனால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் யாராவது ஒருவர் விட்டு  கொடுத்து போனால் வாழ்க்கை இனிமையாக செல்லும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பண பிரச்சனைகள் விலகி புது தொழிலில் முதலீடு செய்வீர்கள். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும்.  

மிதுனம்

ராகு பலன்கள்: இது நாள் வரை  ஜென்ம ராசியில் இருந்து பல இன்னல்களை கொடுத்து வந்த ராகு பகவான் இனி உங்கள்  ராசிக்கு 12 ம் வீட்டிற்கு வருவதால்   எல்லா கஷ்டங்களும் விலகும். தன ஸ்தானத்தை குரு பகவான் பார்க்க போவதால் தடை பட்டு வந்த பண வரவு  சீராகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஓன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புத்திரர்களால் வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் நிலவும்.

கேது பலன்கள்: இது நாள் வரை  உங்கள் ராசிக்கு 7 ம் வீட்டில் அமர்ந்து கணவன் மனைவிக்குள் பிரிவையும், மன கசப்பையும் உண்டாக்கிய கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 6 ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து லாபத்தை அடைவீர்கள். தொழிலில் இருந்து வந்த முடக்க நிலை மாறி அசுர வளர்ச்சி அடையும். கணவன் மனைவி உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும்.

சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இது நாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வுகள் இனிதே கிடைக்கும். எதிரிகள் பலம் இழந்து உங்கள் கால்களில் தஞ்சம் அடைவர். கொடுக்க வேண்டிய கடன்களை பைசல் செய்வீர்கள். வெளி நாட்டு தொடர்புகளால் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள். 

கடகம்

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 12 ல் இருந்து அமைதியை குலைத்து பல விதமான நெருக்கடிகளை கொடுத்து கொண்டிருந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு வருகிறார். இது ஒரு சுப பலனை காட்டுகிறது.  லாப ஸ்தானதில் அமரும் ராகு பகவான் பண வரவை அதிகரிப்பார். மனதில் தைரியத்தையும் , தன்னம்பிக்கையையும் அளித்து புது புது முயற்சிகளில் இறங்க வைத்து அதில் வெற்றியையும் பண வரவையும் அளிப்பார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.  கணவன் மனைவிக்குள் பிரியம் அதிகரிக்கும்.  பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

கேது பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 6 ம் இடத்தில் அமர்ந்த கேது பகவான் உங்கள் ராசிக்கு  5 ம் வீட்டுக்கு வந்து அமர்கிறார்.  இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்று தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். சப்தம பார்வையாக உங்கள் ராசியை குரு பகவானும் பார்க்க போவதால் இனி ஒரு வருட காலத்திற்கு உங்களுக்கு வசந்த காலமென்றே சொல்ல வேண்டும். சிலருக்கு விபரீத ராஜ யோக அமைப்பு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் தொடங்க வழி கிடைக்கும்.  

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன்  சுமூக போக்கு உண்டாகி சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேற்றுமை மாறும்.

சிம்மம்

ராகு  பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 11 ம் வீட்டில் இருந்து அதிர்ஷ்ட காற்று வீசிய ராகு  இப்போது ராசிக்கு 10 ம் வீட்டிற்கு வருகிறார்.  இதனால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு ஏதுவான சூழல் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் ஏற்படும். இதன் பொருட்டு பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தம்பதியர்க்குள் இணக்கம் அதிகரிக்கும். 

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 5 ம் இடத்தில் இருந்த கேது பகவான்  பல முரண்பட்ட  பலன்களை அளித்து வந்தார். இதனால் உறவினர்கள் மத்தியில் பகை உணர்வு ஏற்பட்டிருக்கும்.  இனி உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் வந்து அமர போகிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. உங்கள் பேச்சில் ஒரு முதிர்ச்சி தன்மை தென்படும். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும்.  சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

கன்னி

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 10 ம் வீட்டில் அமர்ந்து வேலையில் பல நெருக்கடிகளை கொடுத்து வந்த ராகு பகவான் இனி ராசிக்கு 9 ம் வீட்டில் வந்து அமர்கிறார்.  இதனால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். இதை ஆக்கபூர்வமான செயல்களில் செலுத்தி பெரும் பலன்களை அடையவும். 

உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். 9 ஆம்  பார்வையாக ராசியை பார்க்க போகும் குரு பகவான் பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டில் பெரும் லாபத்தை அடைவார்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஏற்ற காலம். வாழ்க்கை தரம் உயரும்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் இருந்து பல பிரச்னைகளை கொடுத்து நிம்மதியை இழக்க வைத்த கேது பகவான் 3 ம் வீட்டில் வந்து அமர போகிறார். இதனால்  இழந்த செல்வங்களை திரும்ப பெரும் அமைப்பு உண்டாகும். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். சுறுசுறுப்புடன் செயலாற்றி பல வெற்றிகளை பெறுவார்கள். பிள்ளைகளால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலர் வாகனங்களை புதுப்பிப்பார்கள். அரசாங்க வகையில் பல உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் சுமூக போக்கு நிலவும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும். மொத்தத்தில் மிக சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள்.

துலாம்

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 9 ம் வீட்டில் அமர்ந்து பண தட்டுப்பாடும், மன காஷ்டத்தையும்  கொடுத்து வந்த ராகு பகவான் இனி 8 ம் வீட்டில் சென்று அமர்கிறார்.  இது மறைவு ஸ்தானம். 

இது வரை இருந்த மந்த நிலை மாறி புது உத்வேக சூழல் உருவாகும்.  இனி எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும்.  வேலையில் புது புது உத்திகளை கையாண்டு மேலதிகாரியின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். இதனால் பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.  மருத்துவ செலவு குறையும்.  வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 

கேது பலன்கள்: இது நாள்  உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் அமர்ந்து விவேகமாக செயலாற்ற வைத்த கேது பகவான் இனி உங்கள்  ராசிக்கு 2 ம் வீட்டில் வந்து அமர்கிறார். இதனால் வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். புனித காரியங்களுக்கு பணத்தை செலவு செய்யும் சூழல் உருவாகும்.  தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உங்கள் சாதூர்ய பேச்சால் யாராலும் முடிக்க முடியாத வேலையை எளிதில் முடித்து காட்டுவீர்கள். அளவுடன் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். அளவிற்கு மீறி பேசும் போது பெரும் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்டும் காலமிது.

விருச்சிகம்

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 8 ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வளர்ச்சியை தடுத்து வந்த ராகு பகவான் இனி ராசிக்கு 7 ம் வீட்டில் வந்து அமர போகிறார். இதனால் இது வரை காத்து வந்த அமைதி நிலை கலைந்து சுறு சுறுப்புடன் செயலாற்றிவார்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். ஓருவருகொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை விலக்கலாம். பண விஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்கள் அனுபவம் இல்லாத தொழில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். 

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 2 ம் இடத்தில் இருந்து வீண் வாக்குவாதங்களை  ஏற்படுத்தி கொண்டிருந்த கேது பகவான் இனி உங்கள் ஜென்ம ராசியிலேயே வந்து அமர போகிறார். இதனால் உங்கள் பேச்சில் ஒரு 

ஒரு கனிவு தென்படும். ஆன்மிக செயல்களில் மனம் உந்த செய்யும். பொறுமையுடன் செயலாற்றி பல வெற்றிகளை அடைவீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்ல நேரிடும். புண்ணிய காரியங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். விட்டு கொடுத்து போனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.   வியாபாரத்தில் மந்த நிலை உருவாகி சரியாகும். 

தனுசு

ராகுவின் பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து வெளியில் சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை கொடுத்துவந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 6 ம் வீட்டில் வந்து அமர்கிறார்.  பிரிந்திருந்த கணவன் மனைவி  ஒன்று சேருவர். இனி குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் 2 ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதும் இருந்து வந்த பண தட்டுப்பாடு விலகி சீரான தன வரவுக்கு வழி வகுப்பார் இதனால் கொடுக்க வேண்டிய கடன்களை அடைக்கும் நிலை உண்டாகும். மனம் நிம்மதி அடையும். வேலையில் இருந்து வந்த மந்த நிலை மாறி நிலையான வேலையில் அமருவர்.  சொத்து பிரச்சனைகளில் ஒரு சுமூக தீர்வு கிடைக்கும். 

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்து உடல் நிலையில் தொந்தரவு கொடுத்து வந்த 

கேது பகவான் இனி 12 ம் வீட்டில் சென்று அமர்கிறார். இது திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் காலமாக மாறும். உங்கள் கனிவான பேச்சி பலரையும் வசிய படுத்தி உங்கள் தொழில் முறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புது தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகி பதவி உயர்வு கிடைக்கும் .  சிலர் வியாபார விருத்திக்கு முதலீடு செய்வர் அதில் பன் மடங்கு லாபமம் அடைவர்.  ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் பக்குவ தன்மை தென்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய தோழிகளின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

மகரம்

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள்  ராசிக்கு 6 ல் இருந்த ராகு  பகவான் மறைமுக எதிரிகளால் மன உளைச்சலையும், எதிர்ப்புகளையும் கொடுத்து வந்தார் இனி அவர் உங்கள் ராசிக்கு 5 ம் வீட்டில் அமர போகிறார்

இதனால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். செய்வதறியாது இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்.  ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டில் அமர்ந்து வீண் விரையங்களை , மன சோர்வையும் அளித்து வந்த  கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 11-ல் வந்து அமர போகிறார். இதனால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வங்கியில் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். புது புது உத்திகளை கையாண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். 

குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. 

கும்பம்

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 5 ல் அமர்ந்து தொல்லைகளை கொடுத்து வந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் வந்து அமர போகிறார். இனி பிள்ளைகளால் இருந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.  பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். வியாபாரத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து அளவான லாபத்தை பெறுவீர்கள். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எந்த பிரச்னைகளையம் சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். 

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 11 ம் வீட்டில் அமர்ந்து பல இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களை காத்து வந்த கேது பகவான் இனி 

ராசிக்கு 10 ம் வீட்டில் வந்து அமர்வதால் இனி எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க வைப்பார். சகோதரம் வகையில் இருந்து வந்த மோதல் விலகி அன்பு பாராட்டுவார்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களின் அறிவை வளர்க்க புது முயற்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். தொழில் விருத்திக்கு அயராது பாடுபட்டு, அதில் வெற்றியும் அடைவீர்கள்.  உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும்.

மீனம்

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4  ம் இடத்தில் அமர்ந்து உங்களை சோர்வடைய செய்த ராகு பகவான் ராசிக்கு 3 ம் வீட்டில் வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கடன்கள் பைசலாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்டு வந்த  சுபகாரியங்களை இனிதே சிறப்பாக நடந்தேறும்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்களின் விருப்பங்களுக்கேற்ப நடந்துகொள்வார்கள்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 10 ல் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 9 ல் வந்து அமர்கிறார். வேலையில் நிலவி வந்த தேக்க நிலை மாறி உயர்ந்த நிலை அடைவீர்கள். பெண்களின் நட்பு கிடைக்கும் . புதிதாக ஆடை, ஆபரணங்கள்  வாங்குவீர்கள். வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெருகும். ஒரு சிலருக்கு வெளி நாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும் . உங்கள் பேச்சுக்கும் அனைவரும் கட்டுப்படுவர்.

No comments:

Post a Comment