Search this Blog

Sunday, December 26, 2021

காலம் மாறி போச்சு!

1960

எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட விகடன் கல்கி அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம் இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்....

1970

புத்தகத்தை விட்டாச்சு எப்ப பாரு transistor radio அதுல இந்த இலங்கை வானொலி 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம்..இளையராஜாவா msv யேன்னு சண்ட.. ஜானகியா லதா மங்கேஷ்கர் யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை.. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு...

1980

புதுசா வந்திருக்கிற இந்த டிவியை போட்டு உடைச்சிடணும் மழை காலத்துல கோடு கோடா கோர்ன்னு ஒரே சத்தம்... வராத ரூபவாஹினி யை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால தவம்... வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த வெள்ளை புடவை கட்டிண்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க.

1990

எவண்டா இந்த வீடியோ கேசட் ப்ளையரை கண்டுபிடிச்சவன் 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வைத்திருக்காங்க... Evil dead எத்தனை வாட்டி போட்டு உயிரை எடுப்பிங்கடா ஓடி போயிடு வெளியில

2000

கேபிள் 📺 போட்டுட்டு எப்ப பாரு அதுக்கு முன்னாடியே உக்கார்ந்துக்கிறான்... சாப்பாடு டிபன் எல்லாமே ஹாலில்லேயே பாலசந்தர் சீரியல் திங்கட்கிழமை வருமே அது தான் பாக்கற மாதிரி இருக்கு புதன்கிழமை வர்ற விடாது கருப்பு செமயா இருக்கு என்ன இருந்தாலும் ரூபவாஹினி மாதிரி வருமா

2010

24 மணி நேரமும் இந்த இண்டர்நெட் டிலே என்ன பாக்கிறான்னோ படிக்கிறானா இல்லையானே தெரியல சாமி இப்படியே போனா எப்படித்தான் படிச்சு வேலைக்கு போயி ஹம்...

2020

Netflix, amazon , WebTV இந்த கர்மேந்திரியங்கள் வந்த பிறகு முகத்தை பத்து பேசறதேயில்லை சாப்பிடும்போது கூட மொபைலையே முறைச்சிட்டு இருக்கானுங்க...
பேரன் பேத்திகளுக்கு ஆடு மாடு நிலாவை காட்டி சோறு ஊடுவது போய் இப்பொழுது செல்லை கையில் கொடுத்து அவைகள் அதில் கிட்ஸ் யூடுப் பார்க்கையில் சோறு ஊட்டும் படலம் நிறைவேறுகிறது 

இந்த வார்த்தைகள் ஒலிக்காத தமிழக இல்லங்கள் மிகவும் குறைவே...

உங்க வீட்டில எப்படிங்க....

குழந்தைகள் மனநல மருத்துவரின் அறிவுரைகள்

'🙏 குழந்தைகள் மனநல மருத்துவரின் அறிவுரைகள் 🙏குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

🌼ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..

🌼பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்..

🌼தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்..

அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.

'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்..

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?

பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.

இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல்,

பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.

தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.

குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.

🌼ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது..

🌼அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது..

🌼தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது..

🌼 மற்றவர்களை மன்னிப்பது..

🌼தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது..

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.

இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் புத்திசாலித்தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.

எனவே, 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.

உங்கள் பள்ளிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிருங்கள்.....பெற்றோர்களே இது மனநிலை இதுபோன்ற உளவியல் செய்திகளால் சிறிதாவது மாறட்டும்🎉

Saturday, December 25, 2021

*பிரச்சனையா... (Problem) அசௌரியமா (Inconvenience)*

*அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர்*, *’நான் கற்ற பாடம்’* *என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்*.

*அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்*.

*'முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில்* *’பிரச்சினை’* *என்ற சொல் பல முறை உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்*:

*'நீ பேசும் போது* *பிரச்சினை*’ *என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது* *பிரச்சினை.*

*உன் வீடு எரிந்து போய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது* *பிரச்சினை...* *ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே* *பிரச்சினை.*

*இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம். மற்றபடி நீ* *பிரச்சினை* *என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே* *அசௌகரியங்கள் (inconveniences).*

*இதுபோன்ற அசௌகரியங்கள்* *வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள்*.

*நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘* *என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்*.

*அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் அது* *உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா* *என்று என்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது*.

*கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"*

*நாமும் நிதானமாக யோசிப்போம்..நமது பிரச்சினை* *உண்மையில் பிரச்சினை தானா, இல்லை தற்போதைய அசௌகரியமா என்று*.

Friday, December 17, 2021

ஆயுள் தண்டனை !

 ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!😂😂😂

இட்லிக்கு விளக்கம்

 ⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...


⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...


⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...


⚪இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism..


⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...


⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...


⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...


⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Fascism


⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.


⚪அடுத்தவன் இட்லியை திருடி தின்றால் அது  Dravidinism.


⚪இட்லியை சுட கத்துகுத்தது நாங்கதான்னு சொன்ன Periyarism 


⚪ஓசி இட்லியை சாப்பிட்டால் அது Communism


⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.


⚪இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...


⚪இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.


⚪இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!


  ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா....என்று என்மேல் கடுப்பாகி..என்னை  அடிக்க நீங்க நினைத்தால் அது  டெர்ரரிஸம்..

😂😂😂🙃🙃🙃

Tuesday, December 14, 2021

நல்லது எது ? கேட்டது எது?

தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் "தாவு" என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்.

ஒரு காலை வெட்டி விட்டு "தாவு" என்றான், தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது.

மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.

நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான். நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது.
மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டே யிருந்தான்.
அதனிடமிருந்து அசைவேயில்லை !

ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்- *"நான்கு கால்களையும்  எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*

*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*
வாயை மூடிக்கிட்டு ஒரு *மொபைல் போன்* குறைந்தது 10 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு பசு *மாட்டுக்கு* 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்க வலிக்குது. 5 ஆயிரம் கொடுத்து ஒரு *ஆட்டுக் குட்டிய* வாங்க வலிக்குது.

தினமும் *20, 50, 100, 200* ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு *செலவு செய்யும் சாமானியன்* தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கொடுங்கன்னு சொல்றான்.

*நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம்* பற்றி வாய் கிழிய பேசுவிங்க,  உங்களுக்காக உங்க *ஊருக்காரன்* வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பெண்ட்ரைவ் கூட வாங்க மாட்டிங்க, உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் *அமேசான், பிளிப்கார்ட்… அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிற…

அரிசி போட்டவுடன் வேகணும்! 
சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் ! 
பொடிசா இருக்கணும் ! 
ஆனா நோய் வரக்கூடாது.

பழுப்பு நிறத்துல இருக்ற அரிசிய வெள்ளையா கேட்டா அவன் எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்? 
தப்பு யார் மேல?

கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு நீ கடைகாரண்ட கேட்ப…
அவன் விளைவிக்கிறவண்ட சொல்றான்…
விளைய வைக்கிறவன் பூச்சி மருந்த அடிக்கிறான்…
நீயும் வாங்கி சாப்டுற…
அப்றோம் அது வலிக்குது இது வலிக்குதுன்னு டாக்டர்ட்ட போற… 

அங்கே என்ன நடக்குது?
இதுக்கு ஒழுங்கா நாலு கீரை பூச்சி கடிச்சிருந்தாலும் ஒழுங்கா கழுவி தின்னுருக்கலாம்ல?
எல்லோரும் ஆடு மாடு மேச்சவன் வாரிசுதான். என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும். இப்போ பேன்ட் சட்ட, பேமிலி டாக்டர், KFC Chicken, Pizza, Burger னு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?

*நல்லது எது ? கேட்டது எது? -ன்னு புரியாம வாழ்றத விட இன்னும் ஆடு மாட வச்சு சானிய அள்ளி உரமாக்கி எங்கோ ஒரு மூலைல உனக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை என்று உணர்வீரோ ?!*  

நல்லதை சாப்பிட நினை. 
சாப்பிட கொடுத்தவனை நினை...!!! 🙏🙏

Monday, December 13, 2021

#இலந்தை பழம் அடிக்கடி சாப்பிடுவதால் என்ன பலன்கள்...!!

 இலந்தை பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். 


இப்பழத்தில் கொட்டைப்பகுதியும் அதை சுற்றி சதைப்பகுதியும் இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்த பழமாகும். இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது.


இலந்தை பழத்தில் மாவுசத்து, தாது உப்புகள், இரும்புசத்து, ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டது.

இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

உடலில் உள்ள பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தை பழத்துக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

சிலருக்கு அடிக்கடி உடல்வலி, அசதி போன்றவை ஏற்படும். இவர்கள் சிறிது நேரம் வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

பெற்றவர்கள்

மனைவி இறக்கும்போது, 
*அவருக்கு வயது 45 இருக்கும்*. 
உறவினர்கள், 
*நண்பர்கள்* 
அனைவரும் 
*அவரை* 
*மறுமணம்* 
செய்து கொள்ளுமாறு 
வற்புறுத்தியும், 
*அவரால்* 
*அதை ஏற்றுக்கொள்ள* 
*முடியவில்லை* .

என் மனைவி, 
*அவள் நினைவாக* 
எனக்கு 
*ஒரு மகனை* 
விட்டு சென்றிருக்கிறாள். 
*அவனை வளர்த்து* 
ஆளாக்குவது ஒன்றே
*இனி என் வேலை*. 
அவன் சந்தோஷத்தில் 
*அகமகிழ்ந்து*, 
அவன் வெற்றியில் நான்
*திளைத்திருப்பது* 
எனக்கு போதும். 
*அவனுக்காக* 
*வாழ போகிறேன்*. 

இன்னொரு துணை 
*எனக்கு தேவையில்லை* 
என்று சொல்லிவிட்டார்.

வருடங்கள் உருண்டோடியது. 
மகன் வளர்ந்து 
பெரியவனானதும், 
தன் வீட்டையும், 
வியாபாரத்தையும் 
மகனிடம் 
எழுதி கொடுத்துவிட்டு 
ஓய்வு பெற்றார். 

மகனுக்கு திருமணமும் 
செய்து வைத்து, 
அவர்களுடனேயே 
தங்கியும் விட்டார்.

ஒரு வருடம் போனது. 
ஒரு நாள் 
வழக்கத்துக்கு மாறாக, 
கொஞ்சம் 
சீக்கிரமாக 
காலை உணவு உண்ண, 
*மருமகளிடம்* 
ரொட்டியில் தடவ 
*வெண்ணெய் 
தருமாறு கேட்டார். 
*மருமகளோ* , 
*வெண்ணை* 
*தீர்ந்துவிட்டது* 
*என்று சொல்லி விட்டாள்*. 

மகன் 
அதை கேட்டுக் கொண்டு, 
தானும் உணவருந்த உட்கார, 
தகப்பன் வெறும் 
ரொட்டி துண்டை 
உண்டு விட்டு நகர்ந்தார். 

*மகன்* 
உணவருந்தும் போது, 
*மேஜையில்* 
*வெண்ணை* 
கொண்டு வந்து 
வைத்தாள் *மனைவி*. 
ஒன்றும் பேசாமல் , 
*மகன்* 
தன் வியாபாரத்துக்கு 
புறப்பட்டான். 
*அந்த வெண்ணையை* 
பற்றிய சிந்தனையே 
*அந்நாள் முழுதும்* 
அவன் எண்ணத்தில் 
*ஓடிக்கொண்டிருந்தது*.

மறுநாள் 
காலையில் 
தன் 
தகப்பனை அழைத்தான். 
அப்பா வாருங்கள் 
நாம் வக்கீலை 
பார்த்துவிட்டு 
வருவோம் என்றான். 
ஏன் எதற்காக 
என்று தகப்பன் கேட்க...

நானும் 
என் மனைவியும் 
வாடகை வீட்டுக்கு 
குடி போகிறோம். 
என் பெயரில் 
எழுதிய அனைத்தையும் , 
உங்கள் 
பெயருக்கே 
மாற்றி கொள்ளுங்கள். 

இந்த வியாபாரத்திலும் 
இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன். 
மாதா மாதம் 
சம்பளம் வாங்கும் 
சராசரி 
தொழிலாளியாக 
இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..

ஏன் 
இந்த திடீர் முடிவு?. 
இல்லை அப்பா 
*உங்கள் மதிப்பு* 
என்னவென்று 
*என் மனைவிக்கு* 
உணர்த்த வேண்டிய 
*கட்டாயம் வந்துவிட்டது*. 

*சாதாரண வெண்ணைக்காக* 
நீங்கள் கையேந்தும் 
*நிலை வரக்கூடாது*. 
ஒரு பொருளை 
பெறுவதில் 
உள்ள கஷ்டத்தை 
*அவள் உணர வேண்டும்*. 
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...

பெற்றவர்கள் 
பிள்ளைகளுக்கு 
ATM கார்டாக இருக்கலாம்.. 
ஆனால் பிள்ளைகள் என்றும்
ஆதார் 
(அடையாள) கார்டாக 
இருக்க வேண்டும் 
என்பதே 
இந்த கதையின் கருப்பொருள்.

பெற்றவர்களை 
புறக்கணிக்காதீர்கள். 
அவர்கள் இல்லாமல் 
உங்களுக்கு 
அடையாளம் என்பதே இல்லை.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும் ,

அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். 

அவர் மணந்த பெண் நல்லவள் தான்.

 என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.  

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். 

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.

மகனே..
   நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

   எப்படித் தெரியுமா...? 

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். 

 உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.

 நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. 

நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

 எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,

 தைரியமாக மருந்து கொடு.

 அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.  

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

   மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,

 மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். 

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.

 ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.  

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

 எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.

 இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். 

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.  

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

 ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.  

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

 எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்.

 வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

 ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

 ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.  

எப்படி அவரை விரட்டுவது..?

 பளிச்சென்று யோசனை பிறந்தது. 

வாசல் பக்கம் பார்த்து கத்தினான். 

அம்மா....!!
   அப்பா உள்ளே இருக்கார். 

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!

இங்க இருக்கார்.....!
   என்று அலறினான்....!

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!

 கட்டுனது     எமனாயிருந்தாலும்,
 இல்லை எவனாயிருந்தாலும்  ,,,,

பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!!

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!

#படித்ததில் (பிடித்தது )#சிரித்தது

Sunday, December 12, 2021

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:

*நான் எங்க அம்மா வீட்டுக்கு

குழந்தைகளோட போறேன்.*
திரும்பி வர
10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து
நாலு பாட்டிலும் சிகரெட்
பாக்கெட்டும் எடுத்தேன்.
--------------------------
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல
பக்கத்து வீட்டுக்கு
பேப்பர் போட்டாச்சான்னு daily
அவங்ககிட்ட வழிய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன் வேற.
-------------------------
சமையல் கட்டு
பக்கம்
போக
வேணாம்
ஸிங்க்கு
காவி கலருக்கு
மாத்தினீங்கன்னா
சும்மா இருக்க
மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு
விளக்கேத்துங்க
ரெண்டு ஸ்லோகம்
சொன்னா நாக்கு
வெந்துடாது
------------------------
வாக்கிங் போறப்போ
டீ ஷர்ட்
போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம்
ஜிப்பா கலர்ல
Free size சுடிதார்
டாப்ஸ் இருக்கு
அனிதா அன்னிக்கு
சிரிச்சா
---------------------
Food coupon
க்ரெடிட் கார்டு
எங்கிட்ட இருக்கு...
பீரோவ
உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும்
நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன்
நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க
*வேண்டாம்னுட்டு*
--------------------
பால் ஒரு வாரத்துக்கு
வேண்டாம்னுட்டேன்
அங்க ஸீன் க்ரியேட்
பண்ணாம
வெளில போய்
சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது
இடது புறமும் இருக்கு.
மாத்தி போட்டுட்டு
Uncomfortable லா
இருந்ததுனு ஆஃபீசுல இருந்து
புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு
அவுத்து போடறத
தண்ணில நனச்சு
காயப்போடுங்க.
வளத்தவங்கள
சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த
உடனே பால்கனில
நின்னுகிட்டு
பல் தேய்காதீங்க..
A.M. மா... P.M. மா...
Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க
medical report
பர்ஃபெக்ட்டா இருக்கு.
அந்த
லேடி டாக்டரை
பாக்கவேண்டிய
அவசியமில்லை.
-----------------
என் தங்கையின்
பிறந்தநாள்
போன மாசமே
நாம அட்டண்ட்
பண்ணியாச்சு.
முடிஞ்சிடிச்சி.
நடு ராத்திரில
விஷ் பண்றேன்
பேர்வழின்னு
வழிய வேணாம்
---------------
பத்து நாள்
wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
------------------
அப்றம்
என் தோழிகள்
எல்லாமே
Out of station. .
------------------
கட்டக் கடேசியா
ஒண்ணு.
ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம. !!!
-----------------------
*இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்*
*என்னா வில்லத்தனம்...*😂😂🤣🤣🤣

Saturday, December 11, 2021

வியந்து போன வரிகள்

👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
👌👌👌👌👌👌👌
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌
திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌
பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  
👌👌👌👌👌👌👌
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள "அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது.."
👌👌👌👌👌👌👌
அழகான வரிகள்....
படித்ததில் பிடித்தது.
பிடித்திருந்தால் பகிரவும்...!!!
👌👌👌👌👌👌👌

ஆற்றின் நடுவில் #மண்டபம் எதற்கு..?


ஏதோ அழகுக்கு #தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், #பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!

நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..?

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்....

இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.

வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. அரசும் இது எதற்கு என புதுபிக்க மறந்துவிட்டதா..?

ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது..

இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..

ஆனால் உண்மையில் அறிவியலுக்காக..

Note :

Most of the contents are published here were collected through email and Internet. I bear no responsibility for these contents.