Search this Blog

Sunday, December 26, 2021

காலம் மாறி போச்சு!

1960

எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட விகடன் கல்கி அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம் இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்....

1970

புத்தகத்தை விட்டாச்சு எப்ப பாரு transistor radio அதுல இந்த இலங்கை வானொலி 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம்..இளையராஜாவா msv யேன்னு சண்ட.. ஜானகியா லதா மங்கேஷ்கர் யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை.. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு...

1980

புதுசா வந்திருக்கிற இந்த டிவியை போட்டு உடைச்சிடணும் மழை காலத்துல கோடு கோடா கோர்ன்னு ஒரே சத்தம்... வராத ரூபவாஹினி யை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால தவம்... வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த வெள்ளை புடவை கட்டிண்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க.

1990

எவண்டா இந்த வீடியோ கேசட் ப்ளையரை கண்டுபிடிச்சவன் 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வைத்திருக்காங்க... Evil dead எத்தனை வாட்டி போட்டு உயிரை எடுப்பிங்கடா ஓடி போயிடு வெளியில

2000

கேபிள் 📺 போட்டுட்டு எப்ப பாரு அதுக்கு முன்னாடியே உக்கார்ந்துக்கிறான்... சாப்பாடு டிபன் எல்லாமே ஹாலில்லேயே பாலசந்தர் சீரியல் திங்கட்கிழமை வருமே அது தான் பாக்கற மாதிரி இருக்கு புதன்கிழமை வர்ற விடாது கருப்பு செமயா இருக்கு என்ன இருந்தாலும் ரூபவாஹினி மாதிரி வருமா

2010

24 மணி நேரமும் இந்த இண்டர்நெட் டிலே என்ன பாக்கிறான்னோ படிக்கிறானா இல்லையானே தெரியல சாமி இப்படியே போனா எப்படித்தான் படிச்சு வேலைக்கு போயி ஹம்...

2020

Netflix, amazon , WebTV இந்த கர்மேந்திரியங்கள் வந்த பிறகு முகத்தை பத்து பேசறதேயில்லை சாப்பிடும்போது கூட மொபைலையே முறைச்சிட்டு இருக்கானுங்க...
பேரன் பேத்திகளுக்கு ஆடு மாடு நிலாவை காட்டி சோறு ஊடுவது போய் இப்பொழுது செல்லை கையில் கொடுத்து அவைகள் அதில் கிட்ஸ் யூடுப் பார்க்கையில் சோறு ஊட்டும் படலம் நிறைவேறுகிறது 

இந்த வார்த்தைகள் ஒலிக்காத தமிழக இல்லங்கள் மிகவும் குறைவே...

உங்க வீட்டில எப்படிங்க....

No comments:

Post a Comment

Note :

Most of the contents are published here were collected through email and Internet. I bear no responsibility for these contents.