தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் "தாவு" என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்.
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு" என்றான், தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது.
மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான். நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது.
மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டே யிருந்தான்.
அதனிடமிருந்து அசைவேயில்லை !
ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்- *"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*
*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*
வாயை மூடிக்கிட்டு ஒரு *மொபைல் போன்* குறைந்தது 10 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு பசு *மாட்டுக்கு* 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்க வலிக்குது. 5 ஆயிரம் கொடுத்து ஒரு *ஆட்டுக் குட்டிய* வாங்க வலிக்குது.
தினமும் *20, 50, 100, 200* ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு *செலவு செய்யும் சாமானியன்* தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கொடுங்கன்னு சொல்றான்.
*நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம்* பற்றி வாய் கிழிய பேசுவிங்க, உங்களுக்காக உங்க *ஊருக்காரன்* வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பெண்ட்ரைவ் கூட வாங்க மாட்டிங்க, உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் *அமேசான், பிளிப்கார்ட்… அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிற…
அரிசி போட்டவுடன் வேகணும்!
சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் !
பொடிசா இருக்கணும் !
ஆனா நோய் வரக்கூடாது.
பழுப்பு நிறத்துல இருக்ற அரிசிய வெள்ளையா கேட்டா அவன் எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்?
தப்பு யார் மேல?
கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு நீ கடைகாரண்ட கேட்ப…
அவன் விளைவிக்கிறவண்ட சொல்றான்…
விளைய வைக்கிறவன் பூச்சி மருந்த அடிக்கிறான்…
நீயும் வாங்கி சாப்டுற…
அப்றோம் அது வலிக்குது இது வலிக்குதுன்னு டாக்டர்ட்ட போற…
அங்கே என்ன நடக்குது?
இதுக்கு ஒழுங்கா நாலு கீரை பூச்சி கடிச்சிருந்தாலும் ஒழுங்கா கழுவி தின்னுருக்கலாம்ல?
எல்லோரும் ஆடு மாடு மேச்சவன் வாரிசுதான். என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும். இப்போ பேன்ட் சட்ட, பேமிலி டாக்டர், KFC Chicken, Pizza, Burger னு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?
*நல்லது எது ? கேட்டது எது? -ன்னு புரியாம வாழ்றத விட இன்னும் ஆடு மாட வச்சு சானிய அள்ளி உரமாக்கி எங்கோ ஒரு மூலைல உனக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை என்று உணர்வீரோ ?!*
நல்லதை சாப்பிட நினை.
சாப்பிட கொடுத்தவனை நினை...!!! 🙏🙏
No comments:
Post a Comment